Ads Here

Monday 16 October 2023

பெண்ணே கற்றுக் கொள்

 *பெண்ணே கற்றுக் கொள்*


_நபி இப்றாஹீமுக்கோ_

_வந்தது இறை கட்டளை_

_நாடு கடந்து_

_இறை தூதை எத்தி வைக்க_;


_முட்செடி கூட வளர்ந்திடாத_

_பாலைவனமது_

_தனிமையிலே மனைவி ஹாஜர் பிஞ்சுப் பாலகன் இஸ்மாஈலோடு_;


_"அவன் ஒருவனே போதுமானவன்"_

_என்ற ஈமானிய உணர்வு அன்னை இதயத்தில்_..

_அவரின் ஈமானிய உணர்வை கற்றிடு நீ_;


_கணவனுக்கு கட்டுப்பட்டு_,

_இறை வாக்கை ஏற்று_

_ஆண் துணையின்றி_

_இஸ்லாமிய வளர்ப்பில்_

_குழந்தை வளர்க்கும் கலையை_

_கற்றிடு நீ_;

_பொறுமையின் முகவரி அன்னை ஹாஜரிடம்_;


_அன்னை மர்யம் இம்ரானின்_

_செல்லப் புதல்வியாம்_

_அவர்_

_சிறந்த பெண்களுக்கு இறைவன் கூறும் ஓர் உதாரண மங்கை_;


_மக்களின் பழிச் சொல்லை தாங்கி_

_இறைவன் தேர்ந்தெடுத்த இறைத் தூதர் ஈஸாவை_

_ஈன்றெடுத்த கன்னித் தாய்_

_அன்னை மர்யமிடம்_

_மன உறுதியை கற்றிடு நீ_;

_விலை மதிப்பற்ற பொறுமையை கற்றிடு நீ_;


_பட்டணத்து அரசி மாட மாளிகையின் சீமாட்டி அவர்_

_அகங்காரம் கொண்ட பிர்அவ்னின் மனைவி அவர்_;


_ஏக இறைவனுக்காய் கணவனை எதிர்த்து சுவனக் கனவில் மிதந்து அற்ப செல்வத்தை துறந்த தியாகத்தின் சிகரம் அன்னை ஆஸியாவிடம் பற்றற்ற வாழ்க்கையை கற்றிடு நீ_


_இறை கூறும் சிறந்த பெண்_

_அன்னை ஆஸியாவிடம்_

_வாழ்க்கை நெறியை கற்றிடு நீ_;


_அன்னை கதீஜா_

_இறைத் தூதர் முஹம்மத் நபியின்_

_முதல் மனைவியன்றோ_

_பெண்களிலே முதலில் இஸ்லாத்தில்_

_இணைந்த இல்லத்தரசி அவர்_


_பல சோதனைகளிலும்_

_உயிர்க் கணவனுக்கு ஆறுதலாய்_

_இருந்த உம்முல் முஃமினீன்_

_கதீஜதுல் குப்ராவிடம்_

_கணவனுக்கு பணிவிடை_

_செய்யும் வித்தையைக் கற்றிடு நீ_;


_தன் திரண்ட செல்வங்களை_

_இஸ்லாத்துக்காய் அர்ப்பணித்த_

_தியாக உள்ளத்தை கற்றிடு நீ_;


_அண்ணலாரின் தேசத்தின் உறைவிடம்_

_அன்னை ஆஇஷா_

_அண்ணலாரின் பல பொன்மொழிகளை_

_உலகிற்கு அளித்தவர்_;


_எட்டுகிறது காதுகளுக்கு கடும்_

_அவதூறுகள்_

_ஏகனிடமே ஒப்படைத்தார்_

_இத்துயர்ச் செய்தியை_

_அன்னையின் இறை மீதிருந்த நம்பிக்கையை கற்றிடு நீ_;

_பொறுமை எனும் மந்திரத்தை கற்றிடு நீ_;


_அறிவின் பேரொளியாம்_

_அன்னை அவர்_

_அவரின் ஆழ்ந்த அறிவின்_

_ஒரு துளியேனும் கற்றிடு நீ_;

No comments:

Post a Comment