Ads Here

Sunday 24 October 2021

✯ ```கவலை கொள்ளும் உங்களுக்காக ஓர் குட்டிக் கதை``` ✯

 

```கவலை கொள்ளும் உங்களுக்காக ஓர் குட்டிக் கதை```



ஒரு ஆற்றங்கரையோரத்தில் குரு தனது சீடர்களுடன் கூடாரம் அமைத்துக் கொண்டு தங்கியிருந்தார். அந்த நேரத்தில் ஏதோ ஒரு சத்தம் கேட்டது என்னவென்று பார்க்கையில் அங்கே வேகமாக ஒரு படகு ஆற்றை கடந்து செல்கின்றது என்பதை சீடர்கள் அனைவரும் இதைப் பார்த்து விடுகின்றார்கள். பின்னர் குருவும் அதை பார்த்துவிட்டு பார்த்தும் பார்க்காதது போல் சீடர்களிடம்  என்ன  சத்தம்? என்ன பார்த்தீர்கள் ? என்று கேட்டார்.

அப்போது எல்லா சீடர்கள் சார்பாகவும் ஒரு சீடர் ஆற்றிலே ஒரு படகு ஒன்று வேகமாக செல்கின்றது அதைத்தான் நாங்கள் பார்த்தோம் என்று கூறினார்.

அதே கேள்வியை குரு இரண்டாவது முறையும் கேட்கிறார். அந்த சீடர் நான் கூறியது அவருக்கு சரியாக கேட்கவில்லையோ என்று நினைத்துவிட்டு அதே பதிலை மறுபடியும் கூறினார்.

மூன்றாவது முறையும் குரு என்ன பார்த்தீர்கள் என்று கேட்க அப்போது சீடர்கள் எல்லாம் விழித்துப் பார்க்கிறார்கள். ஒருவேளை வெயில் அதிகமாக அடிப்பதால் இவருக்கு ஏதாவது நேர்ந்து விட்டதோ என்று சீடர்கள் மனதுக்குள் நினைத்து விட்டு சீடர்கள் அனைவரும் படைகைத் தான் பார்த்தோம் என்று மறுபடியும் கூறினார்கள்.

மறுபடியும் குரு சீடர்களிடம் என்ன பார்த்தீர்கள் என்று கேட்க சீடர்களில் இருக்கக்கூடிய ஒருவர் நாங்கள் என்ன பார்க்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அது என்ன என்பதை எங்களிடம் கூறுங்கள் என்று கூற மற்ற சீடர்கள் அனைவரும் அவனை முறைத்துப் பார்த்தார்கள்.

பின்னர் குரு வாழ்க்கைக்கு பிரயோஜனமான எந்த ஒரு விடயத்தை நீங்கள் பார்த்தீர்கள்? என்று அதே கேள்வியை இன்னொரு முறையில் கேட்டார். அப்போது சீடர்களுக்கு புரிந்துவிட்டது ஏதோ ஒரு முக்கியமான விடயத்தை கற்றுத் தருவதற்குத் தான் ஒரே கேள்வியை திரும்பத் திரும்ப கேட்கின்றார் என்று அமைதியாக இருந்தார்கள்.

அந்த நேரத்தில் குரு நடந்துகொண்டே நீங்கள் என்ன பார்த்தீர்கள் என்று பேச ஆரம்பித்து விடுகிறார். அப்போது சீடர்கள் நாங்கள் ஆற்றில் ஒரு படகில் பார்த்தோம் என்று கூறினார்கள்.

அப்போது குரு அது எவ்வாறு பயணித்தது என்று கேட்க சீடர்கள் அது தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தது குருவே என்று கூறினார்கள்.

அப்போது குரு சரி... படகு சுற்றி நீர் இருந்தது அதனால் அது மிதந்து கொண்டிருந்தது. இதுவே வெளியிருந்த நீர் படகுக்கு உள்ளே நுழைந்தாள் என்ன ஆகியிருக்கும் என்று கேட்டபோது. சீடர்களில் இருந்த ஒருவர் அத்துடன் முடிந்துவிடும். அது மூழ்கி உள்ளே சென்றுவிடும். அதற்கு மேல் எங்களால் பயணிக்க முடியாது என்று கூறினார்.

அப்போது குரு ஆமாம்.. அதேபோன்றுதான் நமது வாழ்க்கைப் பயணம். வாழ்க்கை பயணம் என்பது சிக்கல்கள், பிரச்சினைகள், கவலைகள், நிறைந்தது அதில் மனிதர்கள்  பயணிக்க பழகிக் கொள்ள வேண்டும்.

எப்போது சிக்கல்கள், கவலைகள், பிரச்சினைகள் அனைத்தையும் உள்வாங்குகின்றாரோ அன்றிலிருந்து அவனுக்கு வாழ்க்கைப் பயணத்தை பயணிக்க முடியாது அதுதான் உங்களுக்கான ஒரு பாடம் என குரு சொன்னார்.

ஆமாம்...

இது உண்மையான ஒரு விடயம் அல்லவா..?

Written by:-  Abu Ayyash

No comments:

Post a Comment