Ads Here

Saturday 18 September 2021

*திருமணத்திற்கு முன்பு யாரையும் நம்பாதீர்கள்.*

 



```Islamic culture```

❤️💚❤️💚❤️

~*_السلام عليكم ورحمة الله وبركاته._*~

*அன்பு சகோதரிகளே....!!* 

   *திருமணத்திற்கு முன்பு யாரையும் நம்பாதீர்கள்.*

அன்பு சகோதரிகளே திருமணத்திற்கு முன்பு யாரையும் நம்பாதீர்கள். தன்மீது அன்பு வைத்திருக்கும் ஒரு ஆணின் மீது கனவு கொள்ளும் சகோதரிகளுக்கு ஓர் அறிவுறை....


உங்கள் மேல் ஒரு ஆண் ஆர்வமாக இருக்கின்றான் என்றால் அவன் உங்களை உங்களைத்தான் வருங்கால மனைவியாக நினைக்கின்றான் என்று அர்த்தமில்லை. இது போல இருக்கக் கூடிய ஆண்கள் எல்லாம் அல்லாஹ்வுக்கு பயப்படுவது இல்லை. அவன் வாழ்க்கையில் எப்போதும் பார்க்கின்ற எல்லா பெண்களிடமும் தன்னை சிறன்தவனாக காண்பிப்பதற்கு முயற்சி செய்வான். அந்தப் பெண்களும் அவனிடம் நெருக்கமாகப் பழகினால் இன்னும் அவன் அந்தப் பெண்களோடு இனிமையான வார்த்தைகளைக் கொண்டு பேசுவான். அந்தப் பெண்களை அழகான வார்த்தைகளைக் கொண்டு புகழுவான். தன்னை நல்லவன் மாதிரி காமித்து மகிழ்ச்சியாகப் பேசப் பழகுவான். அவன் அந்தப் பெண்களின் மனதில் இடம்பிடிக்கப் பார்பான்.


அவனுக்கு உன்னை பிடித்திருக்கலாம் ஆனால் அவன் உன்னை விரும்ப முன்னாலே பல பெண்களை விரும்பி இருக்கலாம்.மேலும் உன்னை விட சிறந்த ஒரு பெண் ஒருத்தியின் மீது அவனுக்கு விருப்பம் ஏற்படலாம்.

இது போல இருக்கும் ஆண்கள்  எல்லாம் எப்போதும் அவன் வாழ்க்கையில் அடுத்தகட்டத்திற்குப் போய் கொண்டே இருப்பான். ஒரு கட்டத்தில் அவன் அந்தப் பெண்களிடம் என்ன கேட்டாலும் அந்தப் பெண்கள் அவள் மேல் இருக்கக் கூடிய கண்மூடித்தனமான அந்த ஹராமான அன்பினால் தன்னையே கொடுக்க அந்தப் பெண் தயங்க மாட்டால். தன்னுடைய கற்பை இழக்கவும் அவள் தயங்க மாட்டாள். கேவலமான ஒரு அற்பப் புகழ்ச்சிற்காக...
கேவலமான ஒரு அற்ப இன்பத்திற்காக... தன்னுடைய தன் கணவன் மட்டும் பார்த்து ரசிக்கக்கூடிய அவளுடைய அழகை அவள் அந்த அன்னிய ஆணிடமும் காண்பிப்பாள். அது புகைப்படங்களை Share பண்ணுவதன் மூலமாகவும் இருக்கலாம். அது தன்னுடைய வாழ்க்கையிலும் இருக்கலாம். அவன் அந்தப் பெண்ணுடைய வாழ்க்கையை சீரழிச்சதற்குப் பின்னர் போதும் பழகினது என்று கூறி ஏமாற்றி விட்டு வேறொரு அழகான சாலிஹான பெண்ணை நோக்கிப் போய்விடுவான்.


எப்போதும் அவனுடைய வாழ்க்கையில் சிறந்த பெண்ணை ஒரு பெண் ஒன்றை தேடிக்கொண்டே இருப்பான். ஆனால் முடிவில் ஆண் தொடர்பே இல்லாத மற்றும் ஆண்களுடன் கதைக்காத ஒரு அழகுள்ள ஸாலிஹான ஒரு பெண்ணை மனமுடிக்கத் தேரந்து எடுப்பான்.  سبحان الله


இது போன்று இருக்கக் கூடிய ஆண்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். ஆநீதி இழைக்கப்பட்டவரின் பிரார்த்தனைகளுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள். ஏனென்றால் அவர்களுடைய பிரார்த்தனைக்கும் அல்லாஹ்விற்குமிடையில் எந்த ஒரு திறையுமில்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


இது போன்ற அன்னிய ஆண்களின் வார்த்தைக்கு பதிலளிக்கவில்லை என்றால் அவன் உன்னை தவறாக நினைத்து விடுவானோ என்று உன் மனதில் என்னி அவருடைய பொருத்தத்தை அடைவதற்காக நீ அவனுக்கு பதிலளிக்கின்றாயே... பெண்ணே நீ அறிந்து கொள் அவனுடைய திருப்தியை விட அல்லாஹ்வின் திருப்பொருத்தம் உனக்கு மேலானது..


அல்லாஹ் குர்ஆனிலே கூறுகின்றான்:-

  *ஷைத்தான் அவனுக்கு வாக்களிக்கின்றான் அவனுக்கு வீனான எண்ணத்தையும் உன்டாக்குகின்றான். மேலும் இந்த ஷைத்தான் ஏமாற்த்தைத் தவிர வேறு எதவும் தரவில்லை என்று அல்லாஹ் குர்ஆனில் கூறுகின்றான்.*

மேலும் அல்லாஹுதஆலா கூறுகின்றான்:-

 
*முஃமின்களே இறை நம்பிக்கையாளர்களே தீனுல் இஸ்லாமில் நீங்கள் முழுமையாக நுழையங்கள்.ஷைத்தானுடைய அடிச்சுவட்டை நீங்கள் பின்பற்றாதீர்கள்.ஷைத்தான் உங்களுக்கு பகிரங்கமான விரோதியாக இருக்கிறான் என்று அல்லாஹ் கூறுகின்றான்.*


தலைக்கு மேல் உன்னைத் தூக்கி அழகு பார்த்த உன்னுடைய தந்தையை நீ ஒரு போதும் தலை குனிய வைத்து விடாதே அற்ப ஹராமான காதலிற்காக....


இறைத்தூதர் நபி (ஸல்) அவர்களுடைய சமுதாயத்தை வயிற்றில் சுமக்கக் கூடிய பெண்களே...! உன் வருங்கால கணவனை நீ ஒரு போதும் ஏமாற்றாதே. அது திருமணத்திற்கு முன்பாகவும் சரி பின்பாகவும் சரி உன்னுடைய வாழ்க்கையிலும் சரி அவரை நீ ஒரு போதும் ஏமாற்றாதே.. உன்னுடைய ஹலாலான உன் கணவனிவற்காக பொருமையோடும் உன் ஆசையை, கற்பை, அழகை அதை நீ பாதுகாத்து வைத்துக்கொள்.


சகோதரிகளே விழித்துக்கொள்...! அல்லாஹ்விடம் முறையிடு. மனம் மாறுவதற்கான கதவு எப்போதும் திறந்து இருக்கின்றான்.. உன் சோதனைகளோடு போராடு உன் மனதையும் உன் உள்ளத்தையும் , கற்பையும் சுத்தமாக இருக்கக் கற்றுக்கொடு..


நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் உனக்கு சரியான கணவன் வேண்டும் என்று நீ நினைத்தால் உன் மனதிற்கு முதலில் நீ சரியாக இருக்கக் கற்றுக்கொள்...நாங்கள் எப்படியோ அது போன்று தான் நமது வருங்கால வாழ்க்கைத்துணையும் இருப்பார்கள். அதை நாம் நம் மனதில் ஆழமாக புரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.


*நரகம் மனோ இச்சையால் மூடப்பட்டுள்ளது. சுவர்க்கம் சிரமங்களால் மூடப்பட்டுள்ளது.*


ஒன்றை அறிந்து கொள்ளுங்கள் அல்லாஹ் ஹராமாக்கிய ஒரு விடயத்திலிருந்து ஒரு போதும் சந்தோசம் அனுபவிக்கவே முடியாது. உன் அன்பான உண்
ர்வுகளை ஹராமான வழியிலே அல்லாஹ்வை மறக்கச் செய்பவர்கள் மீது நீ வீனாக்காதே.அதற்குத் தகுதியானவர்களுக்கு அதனை நீ பாதுகாத்து வை அது உன்னுடைய கணவனுக்காக மட்டும் தான் இன் ஷா அல்லாஹ்.


*இது என் மனதில் தோன்றிய சில சிந்தனை வரிகள் இது உங்களுக்கு சரி என்று தோன்றினால் மட்டும் அடுத்தவர்களுக்கு எத்தி வையுங்கள்.*

~*இப்படிக்கு அல்லாஹ்வின் அடியான்*~ :- ~_*أبو عياش*_~ ✍🏻




No comments:

Post a Comment