_வரம் கிடைத்த மூவர்_
பனூ இஸ்ராயில் குலத்தாரில் மூன்று பேர்...
ஒருவர் தொழுநோய் பிடித்தவராகவும், மற்றொருவர் வழுக்கைத் தலையராகவும், இன்னொருவர் குருடராகவும் இருந்தனர்.
அல்லாஹ் அவர்களை சோதிக்க நாடி வானவர் ஒருவரை அவர்களிடம் அனுப்பினார். அவர் தொழுநோயாளிடம் வந்து உனக்கு மிகவும் விருப்பமானது எதுவென்று கேட்க அவர் நல்ல நிறமும் நல்ல தோலும் தான் எனக்கு மிகவும் விருப்பமானவை
மக்கள் என் வியாதியின் காரணத்தால் என்னை அருவருகிறார்கள் என்று கூறினார். உடனே அவ்வாணர் அவர் தம் கரங்களால் தடவ.. அவ்வியாதி அவரை விட்டு சென்று விட்டது. அவருக்கு அழகிய நிறமும் அழகிய தோலும் தரப்பட்டன. பிறகு அவ்வானவர் எச்செல்லாம் உனக்கு மிகவும் விருப்பமானது என்று கேட்க அவர் ஒட்டகம் தான் எனக்கு மிகவும் விருப்பமானது என்று பதில் அளித்தார். கருத்தரித்த ஒட்டகம் அவருக்கு கொடுக்கப்பட்டது. அவ்வானவர் இதில் உனக்கு அல்லாஹ் பரகத் வழங்கட்டும் என்று கூறினார்.
பிறகு அவ்வானவர் வழுக்கைத் தலையாலிடம் சென்று உனக்கு மிகவும் விருப்பமானது எது என்று கேட்டார். அழகான முடியும் இந்த வழுக்கை என்னை விட்டுப் போய் விடுவதும் தான் எனக்கு மிகவும் விருப்பமானது. மக்கள் என்னை அருவருத்து ஒதுக்கி வைத்து விட்டார்கள் என்று கூறினார். உடனே அவ்வானவர் அவரின் தலையை தடவிக் கொடுக்க அவருக்கு அழகான முடி வழங்கப்பட்டது. அவ்வானவர் எச்செல்வம் உனக்கு விருப்பமானது எனக் கேட்டார் அவர் மாடு தான் எனக்கு மிக விருப்பமான செல்வம் என்று கூறினார். உடனே அந்த வானவர் அந்த வழுக்கை தலையினருக்கு கர்ப்பமான மாடு ஒன்றை கொடுத்து இதில் அல்லாஹ் உனக்கு பரக்கத் செய்யட்டும் என்று கூறினார்.
அவ்வானவர்
குருடரிடம் சென்று உனக்கு மிகவும் விருப்பமானது எது என்று கேட்டார். அல்லாஹ் என்னுடைய பார்வையை எனக்கு திரும்பச் செய்வதும் அதைக் கொண்டு மக்களை நான் பார்ப்பதில் தான் எனக்கு மிகவும் விருப்பமானது என்று பதில் அளித்தார். அவரை தடவி விடவே அல்லாஹ் அவருக்கு அவரின் பார்வையை திரும்பித் தந்தான். அவ்வானவர் உனக்கு எச்செல்வம் விருப்பமானது என்று கேட்க ஆடு தான் எனக்கு மிகவும் விருப்பமானது என்று பதில் அளித்தார். அவ்வானவர் அவருக்கு கருவுற்ற ஆடு ஒன்றை கொடுத்தார். நிறைய குற்றிகள் ஈன்றிடப் பெற்றனர்.
தொழுநோயாளியாய் இருந்தவருக்கு ஒரு கணவாய் நிரம்ப ஒட்டகங்களும், வழுக்கைத் தலையாக இருந்தவருக்கு ஒரு கணவாய் நிரம்ப மாடும், குருடராக இருந்தவனுக்கு ஒரு கணவாய் நிரம்ப ஆடுகளும் பெரும் அளவில் கிடைத்தன....
_இன்ஷா அல்லாஹ் தொடரும்......_
✍️ அபூ அய்யாஷ்
No comments:
Post a Comment