*السلام عليكم ورحمة الله وبركاته.*
*Islamic Tamil Library*
💙🤍💙🤍💙🤍💙🤍
✨ _Islamic Question and Answer_
🌺 அனைத்து வசனத்திலும் அல்லாஹ் என்ற பெயரைக் கொண்ட சூரா எது?
✨ *சூரா முஜாதலா. (அத்தியாயம்:58)*
🌺 எந்த அத்தியாயம் ஓதப்படும் போது வீட்டை விட்டு ஷைத்தான் விரண்டோடுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?
✨ *சூரா பகரா (முஸ்லிம் 1430).*
🌺 நபி (ஸல்) அவர்கள் நீங்கள் நரகவாசிகளில் ஒருவரல்ல,மாறாக சொர்க்கவாசிகளில் ஒருவரே என்ற சொல்லை யாருக்கு சொன்னார்கள்?
✨ *ஸாபித் இப்னு கைஸ் (ரலி) அவர்கள்.*
*( புகாரி 3613)*
🌺 சூரியன்,சந்திரனோடு எத்தனை நட்சத்திரம் பணிவதாக யூசுப் (அலை) அவர்கள் கனவு கண்டார்கள்?
✨ *11 (அல்குர்ஆன் 12:04).*
🌺 நபி (ஸல்) சுவர்க்கத்தில் எனக்கு முன்பாக உங்களின் செரப்போசையை நான் செவியுற்றேன் என யாரிடம் கூறினார்கள்?
✨ *பிலால் (ரலி) அவர்கள்.*
*(புஹாரி 1149).*
🌺 குர்ஆனை பாதுகாப்பது யார் பொறுப்பில் உள்ளது?
✨ *அல்லாஹ்.*
*(குர்ஆன் 15:09)*
🌺 நபிமார்களின் பெயரால் எத்தனை சூராக்கள் குர்ஆனில் உள்ளது?
✨ *யூனுஸ் , ஹூத் , யூசுப் , இப்ராஹிம் , நூஹ் , முஹம்மத் .*
*( அல்குர்ஆன்: 10,11,12,14,71,47 )*
*Done by :-* ~_*Abu Ayyash*_~✍🏻
No comments:
Post a Comment