Ads Here

Thursday 24 November 2022

சவுதி அரேபியா பெண்ணின் திருமணத்தில் நடந்த கண்ணை கலங்க வைக்கும் ஒரு சம்பவம்.

 சவுதி அரேபியா பெண்ணின் திருமணத்தில் நடந்த கண்ணை கலங்க வைக்கும் ஒரு சம்பவம்






மக்காவிலே ஆப்ஹா என்ற இடத்திலே ஒரு திருமண சபை நடக்கிறது. அன்று இரவு அந்தப் பெண்ணுக்கு திருமணம். அப்போது அந்தப் பெண் மஃரிப் தொழுகையை முடித்துவிட்டு உடல் எல்லாம் அலங்காரம் செய்துவிட்டு திருமணத்திற்காக தயாராகுகின்றாள். ஒரு மணி ஒன்னரை மணி நேரம் அவள் தன்னை அலங்கரித்ததற்குப் பிறகு மீண்டும் அதனாடைய சத்தம் கேட்கிறது இஷாவுடைய தொழுகைக்காக தன் தாயிடத்திலே அந்தப் பெண் செல்கிறாள்.  தாயே தொழுகைக்கு அதான் சொல்லப்பட்டு விட்டது கீழே என்னை அழைத்துக் கொண்டிருக்கிறார்கள் நான் தொழுகையை முடித்து வந்துவிடுகிறேன் என்று கூறினால். அப்போது அந்தத் தாய் கூறினால் மகளே ! தொழுவதற்காக நீ வுழு செய்ய வேண்டும் அவ்வாறு நீ வுழு செய்தால் நீ போட்ட அலங்காரம் எல்லாம் களைந்து விடும் அழிந்து விடும். அதற்குப் பிறகு மீண்டும் எப்படி போடுவது நான் அனுமதிக்க மாட்டேன் என்று அனுமதியை மறுக்கிறார்கள். அந்தப் பெண் தன் தாயிடம் தாயே நான் அழகில்லாமல் அலங்கோலமாக இருந்தால் இவர்கள் கண்களுக்கு வேண்டுமானால் அலங்கோலமாக தெரியலாம். ஆனால் தொழுகையை நிறைவேற்றி அந்த சபைக்கு வந்தால் அல்லாஹ்வின் கண்களுக்கு முன்னால் அழகாகத் தெரிவேனே என்று சொல்கிறாள். அந்தத் தாயிடத்திலே கடுமையாக போராடுகிறாள். அந்தப் பெண்மணி அந்த தாய் அந்தப் பெண்ணை மறுத்துக் கொண்டு ஏதோ செய்து கொள் என்று விட்டு விட்டு செல்கிறாள். அந்தப் பெண்ணோ வுழுவை செய்துவிட்டு இஷா தொழுகைக்கு தயாராகி  தொழுது கொண்டிருக்கிறாள். நீண்ட நேரம் ஆகியும் பிள்ளை வராததை நினைத்து அந்தத் தாய் அந்த அறைக்குச் சென்று பார்த்தாள் அந்தப் பிள்ளை சுஜூதிலே மரணமாகி இருக்கிறாள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


ஏன் அல்லாஹ் இந்தப் பெண்ணிற்கு இப்படி மரணத்தை கொடுத்தான்? ஒரு வேலை அந்தப் பெண் தொழுகையை நிறைவேற்றாத நிலையிலேயே அல்லாஹ் மரணத்தை கொடுத்திருந்தால்..... ஆனால் அல்லாஹ் இப்படி மரணத்தை கொடுத்ததுடைய காரணம் என்ன..? 


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் ஒரு அடியானுக்கு யாருக்கு அல்லாஹ் நலவை நாடிவிட்டால் அல்லாஹ் அவனை நல்ல காரியங்கள் செய்வதற்காக அவனை தயார்படுத்துவான். ஸஹாபாக்கள் கேட்டார்கள் எப்படி அல்லாஹ்வுடைய தூதரே அல்லாஹ்வுடைய செயல்களை செய்பவனாக மாற்றுவான் என்று. நபி அவர்கள் கூறினார்கள் அல்லாஹ் அவருக்கு அருள் செய்வான். மரணத்திற்கு முன்னதாக நல்ல அமல்களை செய்வதற்கு.. மேலும் சில ஹதீஸ்களிலே மரணத்திற்கு முன்னதாக நல்ல விடயத்தை செய்ய வைத்து அதே நிலையிலேயே அவருடைய உயிரை கைப்பற்றுவான்.


யாருக்கு அல்லாஹ் நலவை நாடுகின்றானோ அவர்களை நல்ல செய்கைகளை செய்யக்கூடிய நிலையிலேயே அல்லாஹ் அவர்களுக்கு மரணத்தை ஏற்படுத்தக்கூடிய பாக்கியத்தை அல்லாஹ் கொடுப்பான்.


✍️ அபூ அய்யாஷ்

No comments:

Post a Comment