Ads Here

Tuesday 22 November 2022

மாதவிடாய் (ஹைள்) சட்டங்கள்

 மாதவிடாய் (ஹைள்) சட்டங்கள். 

*தொடர்ச்சி....



3:- தவாப் செய்வது கூடாது.

இதைப்பற்றிய ஒரு நிகழ்வு:- "நாங்கள் ஹஜ் செய்வதற்காக மதீனாவிலிருந்து புறப்படு சென்றோம்.மக்காவை அடுத்துள்ள ஸரிஃப் என்ற இடத்தை அடைந்ததும் எனக்கு மாதவிடாய் ஏற்பட்டது.அப்போது நபி (ஸல்) அவர்கள் நான் இருந்த இடத்திற்கு வந்தார்கள்.அழுது கொண்டிருந்த என்னை பார்த்து உனக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டதா என வினவினார்கள்.நான் ஆம் என்று சொன்னேன்.இந்த மாதவிடாய் ஆதமுடைய பெண் மக்களின் மீது அல்லாஹ் ஏற்படுத்தியது.எனவே கஃபதுல்லாஹ்வை தவாப் செய்வதைத் தவிர ஹாஜிகள் செய்கின்ற மற்ற எல்லா காரியங்களையும் நீ செய்துகொள் என்று சொல்லிவிட்டு தங்கள் மனைவியருக்காக ஒரு மாட்டை குர்பானி கொடுத்தார்கள்.


அறிவிப்பாளர்:ஆயிஷா (ரலி) அவர்கள்.

நூல்:புகாரி 294.


4:- உடலுறவு கொள்ளாதிருத்தல்.


"அது ஒரு தொல்லை.எனவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் விலகிக் கொள்ளுங்கள்.அவர்கள் தூய்மையாகி விட்டால் அல்லாஹ் உங்களுக்கு கட்டளையிட்டவாறு அவர்களிடம் சொல்லுங்கள்.


(அல்குர்ஆன் 2:222) 


✍️ அபூ அய்யாஷ்

No comments:

Post a Comment