Ads Here

Monday 21 November 2022

மாதவிடாய் (ஹைள்) சட்டங்கள்.

 மாதவிடாய் (ஹைள்) சட்டங்கள்.




* மாதவிடாய் (ஹைள்) என்றால் என்ன? 

மாதவிடாய் என்பது ஒவ்வொரு பெண்ணிற்கும் ஒவ்வொரு மாதமும் இயற்கையாக குறிப்பிட்ட நாட்களில் வெளியாகக்கூடிய இரத்தம் மாதவிடாய் எனப்படும்.


பொதுவாக எமது மார்க்கத்தில் மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் நான்கு காரியங்களை செய்வதை விட்டும் தடுக்கப்படுள்ளார்கள்.


1:- தொழுகை.

'மாதவிடாய் ஏற்படும் போது தொழுகையை விட்டு விடு.மாதவிடாய் நின்ற பின்பு குளித்து விட்டு தொழுதுகொள் என நபியவர்கள் கூறியதாக ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

(புகாரி: 228) 


2:- நோன்பு.

மாதவிடாய் காலங்களில் நோன்பு நோற்பதை விட்டும் தவிர்ந்து கொள்ள வேண்டும்.பர்ளான நோன்பாக இருந்தால் பின்னர் விட்ட நோன்புகளை நோற்பது கட்டாயமாகும்.

' ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்பட்டிருந்தால் அவள் தொழுவதில்லை, நோன்பு நோற்பதில்லை அல்லவா?அது தான் மார்க்கத்தில் அவளுக்கு இருக்கின்ற குறைபாடாகும்.

அறிவிப்பாளர்:- (அபூ ஸயீத் அல் குத்ரி (ரலி) அவர்கள்) .

(புகாரி:1951) ...........


இன்ஷாஅல்லாஹ் தொடரும்...


✍️ அபூ அய்யாஷ்.

No comments:

Post a Comment