Ads Here

Sunday 20 November 2022

தஹஜ்ஜத் தொழுகை.

 தஹஜ்ஜத் தொழுகையின் நேரம் : 




*நபி (ஸல்) அவர்கள் இரவில் சேவல் கூவும்போது எழுவார்கள். (புகாரி : 1132). 


*ஸல்மான் (ரழி) அவர்கள் அபூதர்தா (ரழி) அவர்களிடம் இரவின் கடைசிப் பகுதியில் எழுந்து தொழும்படி ஆலோசனை கூறினார்கள்.இதை அறிந்த நபி (ஸல்) அவர்கள் " ஸல்மான் கூறுவது உண்மையே " என்றார்கள்.

 

✓அல்லாஹ் ஒவ்வோர் இரவிலும் மூன்றில் ஒரு பகுதி இருக்கும் போது கீழ் வானத்திற்கு இறங்குகிறான். (புகாரி:1145). 


✓"என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கிறேன்." (புகாரி:1144).


✓"இரவில் ஒரு ( சிறு பகுதியில் ) உமக்கு உபரியான தஹஜ்ஜத் தொழுகையை தொழுது வருவீராக". 

அல்குர்ஆன் ( 17: 79 )


தஹஜ்ஜத் தொழுகையின் பயன்கள்: 


*சுவர்க்கத்தில் உயர்ந்த படித்தரம் கிடைக்கும்.


*உள்ளம் தூய்மையடைகிறது.


*மறுமையில் அல்லாஹ் ' மக்காமே மஹ்மூத் ' எனும் இடத்தில் எழுப்புவான்.


✍️அபூ அய்யாஷ்

No comments:

Post a Comment