வாழ்க்கை
எனும் ஒற்றையடிப்பாதையிலே
தனித்து
நடைபயில முடியாதென்று
ஒரு துணையைத் தேடி...
எத்தனை நிபந்தனைகள்
இன்னும்
எத்தனை எதிர்பார்ப்புக்கள்
தன் வருங்காலத் துணை பற்றி.....
தனக்கு வரப்போகும் கணவன்
ஒரு கோடீஸ்வரனாக இருக்கனும்;
ஒரு டாக்டராக இருக்கனும்;
ஒரு பட்டதாரியாக இருக்கனும்;
இன்னும்
எத்தனை எதிர்பாரப்புக்கள்!
மார்க்க சட்டங்களை கடைபிடித்து
அல்லாஹ்வின் பொருத்தத்தின் கீழ்
வாழ்கின்ற ஓர் இளைஞன்
தன் கணவராக வர வேண்டும்
என்று எண்ணுகிற யுவதிகள்
எத்தனையோ ?!
தன் மனைவியாகப் போகிறவளிடம்
அழகை எதிர்பார்க்கும்
அனைத்து ஆண்களும்
தீனுள்ள பெண்ணை
எதிர்பார்க்காமலிருப்பது ஏனோ ?!
தீனுள்ள பெண்
மனைவியாக வர வேண்டும்
என்று எண்ணுகிற
ஆண்களை
விரல் விட்டுக் கூட எண்ண
முடியும்!
தன் துணையிடம்
அனைத்துப் பொருத்தங்களையும்
பார்த்து விட்டு
மார்க்க விடயங்களைப் பற்றி
ஆராயத் தவறுவதன்
விளைவு தான்
அதிக விவகாரத்துக்கள்
இன்று !
இரு குடும்பங்கள் சேர்ந்து,
இரு மனங்கள் இணைந்து,
இல்லறத்தில் ஈடுபட்டு
இஸ்லாமிய சந்ததிகளை உருவாக்க,
இன்ப துன்பங்களில் பங்கேற்று
வாழ,
மஹர் எனும் நன்கொடையை
மணமகன் மணப்பெண்ணுக்கு
வழங்கி,
ஓர் ஒப்பந்தத்தின் கீழ்
நிகாஹ் எனும் பெயரில் உருவாகிறது
கணவன், மனைவி எனும்
பந்தமொன்று...
அதுவரை
காணாத, பேசாத, பழகாத
இருவருடைய
இரு இதயங்களுக்கிடையிலும்
புகுத்துகிறான் ஒரே நொடியிலே
காதல் எனும் திரவத்தை
இறைவன்!
இஸ்லாம் கூறும் வழியில்
நடத்தப்பட வேண்டிய நம்
திருமணங்களில்
'சம்பிரதாயம்'
என்ற பெயரில்
புகுத்தப்பட்டுள்ள
அன்னிய அனாச்சாரங்கள்
எண்ணிலடங்கா...
வரட்டு கௌரவத்தின் பெயரில்
காதல் திருமணங்களை
ஏற்றுக்கொள்ளாத
நம் பெற்றோர்கள்
கூச்சமின்றி
வரதட்சணை எடுக்கும்
விடயத்தில் நோக்குவதில்லை
என்பதும்
கவலைக்குரிய விடயம் தான்!
இவ்வாறான வரதட்சணை எனும்
சமூக சீர்கேட்டிலிருந்த சமூகத்தில்
மாற்றம் பெற
பிரார்த்திப்போம் இறைவனை
ஐவேளையிலும்!
திருமணமான எத்தனை
பந்தங்கள் தான்
மரணம் வரை தொடர்கிறது
இன்று
கைகள் கோர்த்த வண்ணம்!
*Written by*
*Abu Ayyash*
No comments:
Post a Comment