Ads Here

Saturday 16 October 2021

மிலாதும் இல்லை! மவ்லிதும் இல்லை!


 ☛ தூய மார்க்கமான இஸ்லாத்தில் ☚


மிலாதும் இல்லை!

 மவ்லிதும் இல்லை!


காலம் காலமாக எமது சமூகம் நபிகளாரை நேசிக்கின்றோம், புகழ்கின்றோம் என்ற போர்வையில் இபாதத் தாகவும் நன்மைகளை எதிர்பார்த்தும் அரங்கேற்றி வரும் ஒரு நூதன அனுஷ்டானமே மவ்லிது பாடலாகும். ஐவேளை தொழாதவர்கள் கூட இந்த மவ்லிது பாடல்களை படிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருவது, இது எந்த அளவிற்கு மக்கள் மத்தியில் இடம் பிடித்திருக்கின்றது என்பதற்கு சிறந்த உதாரணம் ஆகும்.


இந்த மவ்லிது பாடல்கள் சுப்ஹான மவ்லிது, ஹிதாயதுல்லாஹ் மவ்லிது, முஹிய்யிதீன் மவ்லிது, ஹஸன் ஹுஸைன் மவ்லிது, ஹிதாயதுல்லாஹ் மவ்லிது, புர்தா பாடல்கள், மீரான் ஸாஹிபு மவ்லிது என்றெல்லாம் ஒவ்வொரு மகான்களில் பெயரிலும் வகை வகையாக மவ்லிதுக

ள் வருவதை அவதனாக்கின்றோம்.


எல்லாம மவ்லிதுகளுமே பொய்யும் புரட்டும் நிறைந்ததாகவும், இஸ்லாத்தின் அடிப்படையையே தகர்க்கக் கூடியதாகவும் உள்ளன. அவற்றில் முதல் இடத்தை பெற்றுள்ள சுப்ஹான மவ்லிது திருக்குர்ஆனுக்கும் நபிவழிக்கும் அகத்து களஞ்சியமாக மற்றும் முரணாக அமைந்துள்ளது.


எந்த ஒரு காரியமும் வணக்கமாக கருதப்பட வேண்டுமானால்- அதை செய்வதால் மறுமையில் ஏதேனும் நன்மை கிடைக்கும் என்று நம்ப வேண்டுமானால்- அந்த காரியம் நபியவர்கள் கற்றுத் தரப்பட்டு இருக்க வேண்டும். அல்லது அவர்கள் முன்னிலையில் அக்காரியம் நிகழ்ந்து அதை அவர்கள் அங்கீகரித்து இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாத எந்த காரியமும் ஒரு வணக்கமாக மறுமையில் நன்மை அளிப்பதாக முடியாது இது இஸ்லாத்தின் அடிப்படை விதி.


இந்த விதியைப் புரிந்து கொள்ள மிகப் பெரிய ஆராய்ச்சி எதுவும் தேவையில்லை. நபியவர்களை இறுதித் தூதராக அல்லாஹ் அனுப்பினான். அவர்கள் மூலமாக வணக்க வழிபாடுகளை கற்றுத் தந்துள்ளான் அவர்களுக்குப் பின் எவருக்கும் வஹி, இறைச்செய்தி வரமுடியாது என்ற அடிப்படைக் கொள்கையை விளங்கி இருந்தால் போதும். இந்த விதியைப் புரிந்து கொள்ள முடியும்.


நபியவர்களுக்கு பின் ஒரு வணக்கத்தை மற்றவர்களும் உருவாக்கலாம் என்று யாரேனும் கருதினால் நபியவர்கள் வணக்கங்களை முழுமையாகக் கற்றுத் தரவில்லை என்று அவர் கருதுகிறார். நபியவர்களுக்குப் பின்  மற்றவர்களுக்கும் வஹீ வரக்கூடும் என்றும் அவர்கள் கருதியவராவார்.


இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன். 

(அல்குர்ஆன் 5:3)


மார்க்கம் முழுமைப்படுத்தப்பட்டு விட்டது என்றால் என்ன பொருள்? அல்லாஹ்வே முழுமைப்படுத்தி விட்டான் என்று கூறினால் அதற்கு என்ன பொருள்?


மார்க்கத்தில் எவையெல்லாம் உள்ளனவோ அவை ஒவ்வொன்றையும் நான் கூறி விட்டேன்; புதிதாக எதையும் உருவாக்கிட அவசியமில்லை. அது கூடாது என்பதைத் தவிர இதற்கு வேறு பொருள் இருக்க முடியாது.


நபியவர்களின் காலத்தில் மவ்லிதுகள்  இருக்கவில்லை. அல்லாஹ்வால் நேரடியாக முழுமைப்படுத்தப்பட்ட மார்க்கத்தில் மவ்லிதுகள் இருக்கவில்லை என்பதே மவ்லுதுகளை நிராகரிக்க போதுமான காரணமாகவுள்ளது.


நாம் நல்ல அமல்களை செய்வதாக இருந்தாலும் அதைப் பற்றி நபியவர்கள் கட்டளை பிறப்பிக்க வேண்டும்  அவர்கள் கட்டளை இல்லாமல் எந்த ஒரு அமலைச் செய்தாலும் அல்லாஹ்வால் நிராகரிக்கப்படும்.


அல்லாஹ் மவ்லித்  ஓதியதாக பொய்யர்கள் கூறுகின்றனர். எங்கும் பரவலாக ஓதப்படும் சுப்ஹான மவ்லிதை எழுதியவர் யார் என்பது கூட தெரியாது. அவர்களின் நூலிலேயே கூறப்பட்டிருப்பதை பார்க்க." மகுடமாய் திகழும் சுப்ஹான மவ்லிதை கல்விக்கடல் கஸ்ஸாலி இமாம் (ரஹ்) அவர்களோ அல்லது இமாம் முஹம்மதுல் மதனி அவர்களோ இயற்றி இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இயற்றியவர் யார் என்றுகூட திட்டவட்டமாகத் தெரியவில்லை.


இஸ்லாம் என்பது அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் காட்டித்தந்தவைதான்.மமவ்லித் என்பது அல்லாஹ்வோ நபியவர்களோ காட்டித்தந்த ஒன்றல்ல. மார்க்கத்தில் ஒருவன் இணைவைக்காத தவறு இல்லாத கவிதைகளைப் படித்தால் தவறு இல்லை என்ற அளவிற்கு தான் மார்க்கம் கவிதைகளை மதிக்கின்றது. ஆனால் மவ்லித் என்ற அனாச்சாரம் உருவாக்கி அதை மார்க்கம் ஆக்கியவர்கள் குர்ஆனில் நபிமார்களை பற்றிய கூறப்பட்ட வசனங்களையும் நபியவர்களைப் பற்றி இறைவன் புகழ்ந்து கூறும் வசனங்களையும் இணைவைப்பு இல்லாமல் சில சஹாபாக்கள் பாடிய கவிதைகளையும் காட்டி இவர்கள் இட்டுக்கட்டிய மவ்லித் ஓதலாம் என பிரச்சாரங்களை வெளியிட்டுள்ளனர். கேடுகெட்ட கவிதைகளை (இவர்கள் பாணியில்) மவ்லித் நபியவர்கள் மிகக் கடுமையாக கண்டித்துள்ளதை மறைத்து விடுகின்றனர். ஸஹாபாக்கள் கூறிய கவிதைகள் அவர்கள் கூறிய கவிதை தானே தவிர இவர்களைப் போன்று எவனும் கூறியவற்றை அவர்கள் எழுதி வைத்துப் படிக்கவில்லை.


சஹாபாக்கள் போர்க்களங்களிலும் யதார்த்தமான நிலையில் இருக்கும் போதும் மட்டுமே சில கவிதைகளை கூறியுள்ளார்கள். இவர்களைப் போன்று வழிபாடாக செய்யவில்லை ஆனால் இவர்களோ அதற்கென்று நாள் நேரங்களைக் குறித்து கூட்டணி சேர்ந்து வழிபாடாகச் செய்கின்றனர்.


ஸஹாபாக்கள் கூறும் போது நபியவர்கள் அதில் உள்ள தவறுகளை திருத்தி உள்ளார்கள். இவர்கள் எழுதியவற்றை எதையும் நபி அவர்கள் திருந்தவில்லை.


திருமணத்திற்கும் விபச்சாரத்திற்கும் எவ்வளவு வித்தியாசம் உள்ளதோ அது போன்று சஹாபாக்கள் கூறிய கவிதைகளுக்கும், முறைகளுக்கும், இவர்கள் பாடும் கவிதைகளுக்கும், முறைகளுக்கும், வித்தியாசங்கள் உள்ளது. விபச்சாரியோடு செய்வதுதானே மனைவியோடும் செய்கின்றான் என்று கூறி விபச்சாரத்தை எப்படி நியாயப்படுத்த  முடியாதோ அதே போன்று ஸஹாபாக்கள் பாடிய கவிதைகளை காட்டி இவர்கள் ஓதும் பொழுதே நியாயப்படுத்த முடியாது.


உலகில் முஸ்லிம்கள் இல்லாத நாடுகளே இல்லை என்ற அளவுக்கு இஸ்லாம் இன்று வளர்ந்துள்ளது. மார்க்கத்தில் மவ்லித்  உள்ளது என்றால் உலக முஸ்லிம் மக்கள்  அனைவரிடமும் மவ்லித் ஓதும் வழக்கம் இருக்க வேண்டும்.


நபியவர்கள் பிறந்த சவுதி அரேபியாவிலும் மவ்லிது பாடும் போதே அதன் பொருளை விளக்கக்கூடிய மக்கள் வாழும் மற்றைய அரபு நாடுகளிலும் மவ்லிதுகள் எதுவுமே இல்லை. இல்லை என்பது மட்டுமல்ல மவ்லிது நூலுடன் யாரேனும் அரபு நாட்டுக்ள் நுழைந்தாள் மவ்லித் நூலை பிடுங்கி அங்குள்ள அரசாங்கம் குப்பையில் வீசி விடுகிறது. அதில் அமைந்துள்ள மோசமான கொள்கைகளும் ஊடல்களும் இதற்கு காரணமாகும்.


அரபு நாடுகளை விட்டு விடுவோம் உலகில் உள்ள வேறு எந்த நாட்டு முஸ்லிம்களாவது இந்த  மவ்லிதை ஓதுகிறார்களா..? நிச்சயம் இல்லை. இல்லை என்பது மட்டுமல்ல மவ்லிதை பற்றி நாம் அவர்களிடம் கேட்டால் மவ்லிது என்றால் என்ன என்று நம்மிடம் அவர்கள் திருப்பி கேட்பார்கள்.


பிழைப்பு தேடி சென்ற இலங்கை மற்றும் தமிழக, மலேசியா, நாடுகளில் மாத்திரம் தான் இந்த மவ்லிதை அறிந்துள்ளனர்.


இது மார்க்கத்தில் உள்ளதாக இருந்தால் உலகின் பல பகுதிகளில் வாழும் முஸ்லிம்கள் இதை கடைபிடித்து ஒழுகியிருப்பார்கள்.


யாரோ சில மார்க்க அறிவு இல்லாதவர்கள் நமது பகுதிகளில் தோன்றி இதை பரப்பிவிட்டனர். இதற்கும் மார்க்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை இதிலிருந்து அறியலாம்.


செய்திகளில் உண்மையானது அல்லாஹ்வின் வேதமாகும். வழிகளில் அழகியது முஹம்மதின் வழியாகும். மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்டவை காரியங்களில் மிகவும் கெட்டதாகும். புதிதாக உருவாக்கப்பட்ட ஒவ்வொன்றும் அனாச்சாரம் ஆகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் சேர்க்கும். என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.


அறிவிப்பவர்:-  (ஜாபிர் பின் அப்துல்லாஹ்)

 நூல் நஸஈ : 1560.



Written by :-  أبو عياش

No comments:

Post a Comment