السلام عليم ورحمة الله وبركاته.
அல்லாஹ் பாதுகாக்க வேண்டும் இன்றைய வாலிபர் சமூகத்தை..!
❍ இன்றைய பல வாலிப ஆண் பெண்களின் இலட்சியமே திருமணத்திற்கு முன் ஹராமான தொடர்பு வைத்துக்கொள்வது அதை எப்படி அவர்களால் ஹலால் ஆக்கிக் கொள்வதுதான்!
❍ இப்படியே இவர்களின் இந்த ஹராமான தொடர்பு பல வருடங்கள் செல்கிறது பின்பு ஒரு நாள் வீட்டில் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என் பெற்றோர்கள் பேச்சை என்னால் மீற முடியாது என்று கணவன் மனைவி போன்று பழகிவிட்டு உனக்கு நல்ல வாழ்க்கை துணை கிடைப்பார்கள் இன்று வேறு ஒரு ஆணையோ அல்லது பெண்ணையோ நிகாஹ் செய்து கொள்வது.
❍ இதற்குப் பெயர் பணம் கொடுக்காமல் ஜினா (விபச்சாரம்) செய்வது- இவர்கள் வைத்துக் கொண்ட பெயர் காதல் என்று! திருமணத்திற்கு முன் ஒருவன்/ஒருத்தி உடன் திருமணத்திற்குப் பின்பு வேறு நபருடன் அல்லாஹ் பாதுகாக்க வேண்டும் இந்த மானக்கேடான செயலை விட்டும் நம்மை.
🎙️ நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள்.நிச்சியமாக அது மானக்கேடானதாகும்.மேலும், (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீய வழியாகவும் இருக்கின்றது. (அல்குர்ஆன் :- 17:32)
❍ அல்லாஹ் ஜினா செய்யாதீர்கள் என்றுகூட கூறவில்லை. அதன் பக்கம் கூட செல்லாதீர்கள் என்று கூறியுள்ளான் என்றாள் நாமே சிந்தித்துக் கொள்ளலாம் அது எவ்வளவு பெரிய பாவம் என்று!
❍ இவ்வளவு தெரிந்தும் பல பெண்கள் தான் நேசித்த ஆணுக்காக இஸ்லாத்தை கற்ப்பை பெற்றோர்களை என அனைத்தும் இழக்க தயாராக உள்ளார்கள் கடைசியில் ஏமாற்றம் அடைவது பெரும் பெண்கள் தான்!
"அல்லாஹ் பாதுகாத்த ஸாலிஹானவர்களைத் தவிர"
Written by:- Amjadh ✒️
No comments:
Post a Comment