Ads Here

Wednesday 22 September 2021

அறிவியலை அதிர விட்ட அல்குர்ஆன்.

 


```Islamic culture```

*_السلام عليكم ورحمة الله وبركاته._*
╔═════

~*அறிவியலை அதிர விட்ட அல்குர்ஆன்.*~

                     ╚═════

🎙️ *அல்லாஹ் குர்ஆனிலே கூறுகின்றான்* .
_(أفلا يتدبرون القرآن)_
( _அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா?_ )

  ✨ *திருக்குர்ஆன் ஓர் அற்புதம் என்றால் அதன் விளக்கம் பேரற்புதம்.*

திருக்குர்ஆன் என்பது இவ்வுலகைப்படைத்த இறைவன் மக்களுக்கு நேர்வழி காட்டுவதற்காக தனது தூதர் மூலம் கற்றுத்தரும் அறிவுரைகளின் தொகுப்பாகும்.
அகில உலக மக்களுக்கு வழிகாட்டிக்கொண்டிருக்கும் அல்குர்ஆன் இன்றைய விஞ்ஞான வளர்ச்சியில் முன்னேறியுள்ள காலத்தில் பல அறிஞர்களை சிந்திக்கவும்,ஆராய்ந்து பார்க்கவும் வைத்துள்ளது.மனிதனை சிந்திக்க வைத்து அவன் உண்மைகளை பகுத்தரியட்டும் என்பதற்காக அவனது படைப்பினங்களின் உதாரணங்கள் பல வற்றை திருக்குர்ஆனில் இறைவன் கூறுகிறான். பாமரர்களையும் படித்தவர்களையும் அவரவர் பாளையில் சிந்திக்க வைத்து உண்மைகளை உரைத்தூண்டுவது திருக்குர்ஆனின் மற்றொரு சிறப்பம்சமாகும்.

*மலைகளும் ஆப்புகளும்*.

மலைகள் என்று கூறும் போது நம் நினைவுக்கு வருவது இந்த உலகின் மிகப்பெரிய மலைச்சிகரமான எவரெஸ்ட் (EVEREST) மலையாகும்.மலைகள் சுமார் பலஇலட்சம் வருடங்களுக்கு முன் உருவாகியதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். எவ்வாரெனில் இந்த பூமியானது *(புவித்தகடு,MANTLE,OUT CORE,INNER CORE)* என நான்கு அடுக்குகள் கொண்டுள்ளது அதன் மேற்பரப்பான புவித்தகட்டில் தான் நாம் அனைவரும் வாழ்கின்றோம்.

அந்தப் புவித்தகடானது *( Lithospheric Plates )*. 7(Main)  பிரதான தட்டுகளையும் 152  (Smaller) சிறிய தட்டுகளையும் கொண்டுள்ளது. மேலும் இந்தத் தட்டுக்கள் உணரமுடியாத அளவிற்கு ஒவ்வொரு வருடத்திற்கும் *0.60cm* தூரத்திலிருந்து *10cm* தூரம்வரை நகர்கின்றது. இவ்வாறு இரண்டு புவித்தட்டுக்கள் ஒன்றே ஒன்று முன்னோக்கி நகரும் போது இரண்டும் பலமாக மோதும். இவைகள் பலமாக மோதும் போது ஏற்படும் விளைவால் கற்கள் நெருங்கி அழுத்தப்பட்டு மலைகளாக உருவாகும். இதன்போது வழிமையான புவித்தட்டு கீழ் நோக்கி அழுத்தப்படுவதுடன் அதற்கு மேலுள்ள தகட்டில் மலைகள் உருவாகின்றது என விஞ்ஞானிகள் கூறுகின்றார்கள்.

- உதாரணமாக:-
ஆசிய கண்டத்தில் எவரெஸ்ட் சிகரத்தை உள்ளடக்கிய இமய மலைத்தொடர் இவ்வாறே உருவாகியது.இதன் போது (Indian) புவித்தட்டும் ( Eurasion ) புவித்தட்டும் கடுமையாக மோதியது இது *நிலமடிப்பு* என புவியியலாளர்களால் அழைக்கப்படுகின்றது.நாம் வாழும் இந்தப் புவியோடு திண்மமாக இருப்பதோடு அதன் கீழ் இருக்கும் ஏனைய அடுக்குகள் திரவ வடிவில் காணப்படும் கடும் சூடான எரிமலை கொழும்புகளாகும். இதனால் அங்கு எந்த உயிரினங்களும் வாழ வாய்ப்பில்லை என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

மேலும் இந்த நிலமடிப்புச் செயற்பாடே மலைகள் உருவாவதற்கு அடித்தலமாக அமைவதோடும் இன்னும் புவியியலாளர்கள் கூறுகிறார்கள் இந்த உலகில் *(ரேபீஸ்)* ஆனது கிட்டத்தட்ட *6,370Km* இருக்கும். ஆனால் நாம் வாழுகின்ற புவித்தகடானது மிகவும் மெல்லியது அதாவது அன்னலவாக இரண்டிலிருந்து *35Km*  இருக்கும்.எனவே விஞ்ஞானிகளின் கருத்துப்படி புவித்தட்டுக்கள் இவ்வளவு சிறியதாக இருப்பதனால் அது அசைவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது என்கிறார்கள்.இங்கு தான் கொஞ்சம் சூடு பிடிக்கின்றது எவ்வாறு எனில் ஆம்புகளாக செயற்பட்டு புவியோட்டிற்கு உறுதித்தன்மையை வழங்குகின்றது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

*இப்போது அல்குர்ஆன் மலைகளைப்பற்றி என்ன கூறுகின்றது..?*
  🎙️ *ألم نجعل الأرض مهادا* (78:6)
*நாம் இப்பூமயை விரிப்பாக ஆக்கவில்லையா..?*

🎙️ *والجبال أوتادا* (78:7)
*இன்னும் மலைகளை (ஆப்பு) ஆக்கவில்லையா..?*

இங்கு பயன்படுத்தப்பட்ட அரபு வார்த்தையான ( *أوتادا* ) விற்கு அர்த்தம் கூடாரம் அமைக்கப்பயன்படும் ஆப்பு ஆகும்.அல்குர்ஆன் மலைகளை ஆப்புவிற்கு ஒப்பிட்டுகாட்டி இருக்கும் விதம் 1400 வருடங்களுக்கு முன்பு பலருக்கு விழங்காத புதிராகவே இருந்திருக்கும்.

*முதலில் மலைகள் பற்றி புவியியலாளர்கள் என்ன கூறுகிறார்கள்..?*

அதாவது நம் கண்முன்னே தெரிவது மலைகளின் ஒரு சிறிய சிறிய மேற்பகுதிதான்.இதை விட 15 மடங்கு பெரிய பகுதி நிலத்திற்குள் புதைந்து காணப்படுகிறது என்கிறார்கள்.இன்னும் அந்தப்பகுதியை விஞ்ஞானிகள் மலைகளின் வேர்ப்பகுதி என்றும் அழைக்கிறார்கள்.

-உதாரணமாக:-
நமது எவரெஸ்ட் மலை சிகரமானது கடல் மட்டத்திலிருந்து அன்னலவாக *9Km* உயரத்தைக் கொண்டுள்ளது. ஆனால் அதன்வேறு சுமார் *125Km* கள் இருக்கும். சாதரனமாக ஒரு பனிப்பாரையின் சிறிய பகுதி எவ்வாறு நீரிக்கு மேலும் அதன் பெரும் பகுதி நீருக்கு உள்ளேயும் காணப்படுகிறதோ அவ்வாறே மலைகளும் காணப்படுகிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

இப்பொழுது நாம் கூடாரங்களை உறிதியாக்கும் ஆப்புக்களை ஒப்பிட்டால் *سبحان الله* ஆப்புகளின் பெறும் பகுதி கிட்டத்தட்ட *90%* வீதமான பகுதிகள் நிலத்திற்குள்ளேயும் அதன் *10%* வீதமான பகுதிகள் வெளியிலும் தெரிகிறது. அது போலவே மலைகளின் பெரும் பகுதி *90%* வீதமான பகுதிகள் நிலத்திற்கடியிலும் அதன் சிறிய பகுதிகள் நிலத்திற்கு வெளியிலும் தெரிகிறது. *سبحان الله* இவ்வளவு நுணுக்கமாக யாரால் பேசமுடியும்.

உலகில் பல பல்கலைக்கழகங்களில் புவியியல் பாடத்திற்கு அடிப்படையாக பயன்படுத்தப்படும் ஒரு புத்தகம் *(EARTH)* எனும் புத்தகமாகும். அதன் ஆசிரியர்களுல் ஒருவரும் அமெரிக்காவின் *(ACADEMY OF SCIENCE)*  இற்கு 12 வருடங்கள் தலைவராக இருந்தவரும் முன்னால் அமெரிக்கா ஜனாதிபதியான ஜிம்மி காட்டருக்கு ஆலோசகராக இருந்தவருமான *Dr.* *FRANK PRESS*அந்தப்புத்தகத்தில் கூறுகிறார் மலையின் பகுதிகளே வெளியில் தெறிகின்றதாகவும் அதன் வேர் எனப்படும் பெரும் பகுதி நிலத்தினுல் காணப்படுகின்றது எனவும் வரையறுக்கின்றார்.

*அல்குர்ஆனும் நவீன புவியியலும் எவ்வளவு நெருக்கமாக பொருந்துகின்றது.இத்தோடும் அல்குர்ஆன் நறுத்தவில்லை*.

~_*தற்போது 12ஆவது விஞ்ஞான அடையாளம்*_~

( *மலைகளை நிலைநாட்டினான்* )

முன்னர் கூறியது போன்று மலைகள் புவித்தட்டுக்கள் ஒன்றோடு ஒன்று பலமாக மோதுவதால் உருவாகின்றன.அப்படி உருவாகும் மலைகள் புவியோடு அசைவதிலிருந்து தடுத்து அதனை உறுதி செய்வதாக பெரும்பாலான புவியியலாளர்களால் தெரிவிக்கிறார்கள்.

-உதாரணமாக:-
*Dr.FRANK PRESS* ஸை பொருத்தவரையில் புவியில் புவியோடுகளை உறுதி செய்வதில் மலைகள் முக்கிய பங்கு வகிக்கின்றது என்கிறார்.பின்வரும் அல்குர்ஆன் வசனம் ஆகின்றது மலைகளின் தொழிற்பாட்டை தெளிவாக விவரிக்கின்றது.

🎙️ *وجعلنا في الأرض رواسي أن تميد  بهم* (21:31)

*இன்னும்:* *இப் பூமி மனிதர்களுடன் ஆடி அசையாமலிருக்கும் பொருட்டு,* *நாம் அதில் நிலையான மலைகளை அமைத்தோம்.*

الله أكبر......
காலங்களைக் கடந்து வியக்கவைக்கும் இவ்வளவு ஆதாரங்கள் இருந்தும் கூட சிலரின் கண்களுக்கு இந்த அல்குர்ஆன் சாதாரன மனிதனின் வார்த்தையாகவே புலப்படுகிறது.14 நூற்றாண்டுகளுக்கு முன்னர் மலைகளின் வேர்கள் பற்றியோ அல்லது மலைகள் இந்தப் புவியோடு எவ்வாறு உறிதி செய்கின்றது என்பது பற்றிப் பேசுவது என்ன..? நினைத்துக்கூட ஒரு சாதாரன மனிதனுக்குப் பார்க்க முடியுமா..?

இன்னும் ஒரு சிலர் நாம் மேலே ஆராய்ந்ததைப் பற்றி கூறுகிறார்கள்.நாம் மலைப்பிரதேசங்களில் தானே வசிக்கிறோம் குர்ஆன் கூறுவது உண்மையென்றால் அங்கு ஏன் நிலநடுக்கம் வருகின்றது என்கின்றார்கள்.

அதற்கான பதில் என்னவெனில் நாம் முழுக் குர்ஆனையும் ஆராய்ந்து பார்த்தால் குர்ஆனில் எங்குமே மலைகள் நில நடுக்கத்தை தடுப்பதாகக் கூறப்படவில்லை நில நடுக்கத்திற்கான அரபு வார்த்தை *زلزلة* வாகும்.

ஆனால் நாம் முன்னரே ஆராய்ந்த வசனத்திலே விடுவது *تميد* ஆகும். அதன் அருத்தம் ஆருதல்,அசைதல் என்பதாகும்.

எனவே அல்குர்ஆன் தெளிவாக கூறுகின்றது மலைகள் இல்லாவிட்டால் நீங்கள் நடக்கும் போதோ அல்லது அசையும் போதோ பூமியும் உங்களுடன் சேர்ந்து அசைந்து இருக்கும் இந்த அசைவையே மலைகள் கட்டுப்படுத்துகின்றன.

                            *இன்னும்:இப்பூமி*( *மனிதர்களுடன்**ஆடி அசையாமலிருக்கும் பொருட்டு நாம் அதில் நிலையான மலைகளை அமைத்தோம்.*

*இப்படிக்கு அல்லாஹ்வின் அடியான்*:- ~*إبو عياش*✍🏻~💚💛❤️💛💚

No comments:

Post a Comment