⎓⎓⎓⎓⎓⎓⎓⎓⎓⎓⎓⎓⎓⎓
இன்று இஸ்லாம் மார்க்கம் இறைமறுப்பு ஆகிவிட்டது. بدعة سنة வாகிவிட்டது. தவ்ஹீத் (التوحيد) என்பதன் தமிழ் பதம் ஏகத்துவம் என்பதாகும் (அதாவது ஒர்மைப் படுத்துதல் என்பதாகும்). முஸ்லிமாக வாழக்கூடிய ஒவ்வொருவரிடமும் தவ்ஹீத் (التوحيد) இருக்க வேண்டும் அதாவது அவர் (موحد) ஆக இருக்கவேண்டும். சில முஸ்லிம்கள் நான் (موحد) இல்லை என்று கூறுவார்கள். அவர்கள் தான் மடமையில் உச்சகட்டத்தை தொட்ட வர்கள்.
தவ்ஹீதின் (التوحيد)எதிர்ப்பதம் (التشريك) என்பதாகும். (التشريك) என்பதன் தமிழ் பதம் இணைவைத்தல் என்பதாகும். அதாவது அல்லாஹ்வை மாத்திரம் வணக்க வழிபாடுகளில் ஓர்மைப்படுத்தி இன்னும் பலரையும் சேர்த்துக் கொள்வதாகும். சிலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் சிலை வணக்கம் புரிந்தால் மாத்திரம் தான் (شرك) என்று ஆனால் شرك என்றால் الله அல்லாதவரிடம் உதவி தேடுதல் رياء இன்னும் பலர் இதில் அடங்கும்.
தற்காலத்தில் ஏகத்துவம் இணைவைப்பாகிவிட்டது. இணைவைப்பு ஏகத்துவம் ஆகிவிட்டது. கால மாற்றங்களும் நாட்களின் சுழற்சியும் இன்னும் எந்த அளவிற்கு மார்க்கத்தில் பெரும் மாற்றங்கள் ஏற்படுத்தி விட்டுறுக்கின்றனவென்றால் எங்கள் தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மற்றும் அவர்களின் தோழர்கள் அதற்குப் பின் வந்த தாபியீன்கள் (تابعين) கள் மற்றும் தப்உ தாபியீன்கள் (تبع التابعين) கள் ஆகியோர் வாழ்ந்த பொற்காலத்தில் இருந்த அடிப்படை (أصل) மார்க்கம் இன்று காணப்படவில்லை. அன்று வழிகேட்டில் வீழ்த்தும் செயல்களாக கருதப்பட்டவை இன்று நேர்வழி அழிக்கக் கூடியவையாக கருதப்படுகின்றன. இந்த மாற்றம் ஏன் ஏற்பட்டது? எப்படி ஏற்பட்டது? இதற்கான பதிலை பின்வரும் அல்லாஹ்வின் கலாம் (كلام) அளிக்கின்றது.
̶➥ ஈமான் கொண்டவர்களே மார்க்க அறிஞர்கள் மற்றும் துறவிகள் பலரும் மக்களின் செல்வங்களை அநியாயமாக உண்கிறார்கள் மேலும் அல்லாஹ்வின் பாதையிலிருந்து அவர்களை தடுக்கின்றார்கள்.
̶இதன் கருத்து தெளிவானதாகும் சுயநலம் கொண்ட ஆதாய நோக்குடைய மார்க்க அறிஞர்களின் மோசடி செயல்கள், شيخ கள் , ஞான குருமார்கள் தங்கள் மன இச்சையைத் தீர்த்துக் கொள்வதற்காகவும் தமது உலக ஆசைகளுக்கு தீனி போடுவதற்காகவும் அப்பாவிச் சகோதரர்களைத் தமது சூழ்ச்சி வலையில் சிக்கவைத்து ஏகத்துவக் கொள்கைகளையும் நபிவழியையும் முற்றிலுமாக மறைத்து விட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரை ஏகத்துவச் சூரியனை மங்கச் செய்து விட்டதாக வெற்றிப் பெருமிதம் கொள்ளும் அளவிற்கு இணைவைப்பையும் வழிகேட்டையும் பிரகாசிக்கச் செய்திட முயற்சி செய்கிறார்கள். அழிவற்ற இறைவனின் பிரத்தியேகப் பண்புகள், இறைவனல்லாத பிறவற்றிலும் இருப்பதாக போதித்து ஏற்கச் செய்துவிட்டனர்.
இன்று நம் இஸ்லாமிய மார்க்கத்தை எடுத்துக் கொண்டாலும் இவ்வாறுதான். அன்றிருந்த தவ்ஹீத் அன்று இருந்த இஸ்லாமிய மார்க்கம் ஏதோ எவனோ கூறிவிட்டுச் சென்ற உருவாக்கிய வழிகேடுகளை இன்று பின் பற்றுகிறார்கள்.
இன்னும் சில முஸ்லிம்கள் ஸஹீஹான (صحيح) ஆதாரம் இருக்க (ضعيف) ஆதாரங்களை வழிநடத்துகிறார்கள்.
சீசர், கிஸ்ரா ஆகிய ரோம், பாரசீகப் பேரரசர்களின் நாடுகளிலிருந்து வரி வசூலித்து வந்தவர்கள் இன்று பெரியார்களின் வாயிலாக கிடைக்கும் வருமானத்தில் வாழ ஆரம்பித்திருக்கின்றனர். ஆயிரக்கணக்கில் இறை வசனங்களும், நபிமொழிகளும் அவர்களுடைய செயல்களைக் கண்டித்தும் கூட (شريعة) த்திற்கு மாற்றமாக முரணான தமது செயல்களை விட்டு ஓர் அங்குலம் கூட விலகத் தயாராக இல்லை.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வீடு வாசலை திறந்து வயிற்றில் கல்லை கட்டிக் கொண்டு விதவிதமான துன்பங்களை சகித்து தமது இரத்தத்தை வேர்வையாக சிந்தி பரப்பிய இஸ்லாம். நபித்தோழர்கள் தங்கள் குழந்தைகளின் இரத்தத்தால் வளர்த்த இஸ்லாம் இன்று எங்கே இருக்கின்றது? இன்றைய இஸ்லாத்திற்கும் முன்பிருந்த இஸ்லாத்திற்கும் இடையே வானத்திற்கும் பூமிக்கும் இடையே வேறுபாடு தெரிகின்றது. உள்ளம் இறைவன் அல்லாதவர்களை நினைவான சிலைகள் வசிக்கும் கோவிலாகிவிட்டது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு ஜனாஸாவின் போது கூறினார்கள் மதீனா சென்று அங்குள்ள சிலைகள் அனைத்தையும் உடைத்து விட்டு கப்ர்கள் அனைத்தையும் தரைமட்டமாக்கிவிட்டு உருவப் படங்கள் அனைத்தையும் அழித்துவிட்டு வரக்கூடியவர் உங்களில் எவரேனும் இருக்கின்றனரா..? அப்போது ஒரு மனிதர் நான் போய் அதனை செய்துவிட்டு வருகிறேன் அல்லாஹ்வின் தூதரே! என்று கூறினார். அவ்வாறே அவர் செல்கிறார். திரும்பிவந்து நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே நான் எந்த கப்ரையும் தரைமட்டம் ஆக்காமல் விடவில்லை எந்த உருவத்தையும் அளிக்காமல் விடவில்லை என்று கூறினார். பின்னர் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இனி இந்த செயல்களை (கப்ருகளை கட்டுவதையும் உருவங்கள் வடிவமைப்பதிலும் எவரேனும் செய்தால் அவன் என் என்னையும் என் மீது இறக்கியருளப்பட்ட வேதத்தையும் நிராகரித்தவனாவான் என்று கூறினார்கள்.
(مسند,أحمد)
இதே போன்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் எத்தனை சம்பவங்கள் நடந்துள்ளன. கப்றுளில் இருப்பவர்களுடன் நாம் நடந்து கொள்ளும் விதம் நம்மை இஸ்லாத்திலிருந்து பின்வாங்கச் செய்து இறை மறுப்பின் பக்கமும் இணைவைப்பின் பக்கமும் கொண்டு செல்லவில்லையா..? நமது துரதிஷ்டம் என்னவெனில் திருக்குர்ஆனை அலட்சியபடுத்திவிட்டோமா. நாமும் திருக்குர்ஆனை கற்றுக் கொள்வதில்லை. நமது வளர்ந்து வரும் குழந்தைகளுக்கும் திருக்குர்ஆனை கற்றுக்கொடுக்க முயல்வதில்லை. இது அல்லாஹ்வின் வேதம். இதை நம்மால் பொரிந்திக் கொள்ள முடியாது. இதனை கற்பதும் புரிந்துகொள்வதும் மார்க்க அறிஞர்களின் கடமை என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இந்தத் தப்பென்னத்தின் விளைவாக தான் நாம் இருள் நிறைந்த வீழ்ச்சி பகுதியில் வீழ்ந்து சென்று கொண்டே இருக்கின்றோம்.
தப்பும் தவறுமான அறிவிப்புக்களை கட்டுக்கதைகளை எவர் வேண்டுமானாலும் தமது விருப்பப்படி மக்களுக்கு கூறி தவறான பாதையில் அதாவது இணைவைப்பின் பாதையில் அவர்களை செலுத்தி விடுகின்றார்கள். ஆனால் நாம் சிந்திக்க வேண்டிய முதல் விடயம் குர்ஆன் சுன்னாவே ஆகும். அதில்தான் தெளிவான வெளிப்படையான ஏகத்துவக் கொள்கை இருக்கின்றது அல்லாஹ்வும் தன் சான்றிதழை பூர்த்தி செய்வதற்காக உலக மொழிகளில் எல்லாம் அதன் மொழி ஆக்கங்களை வெளியிடச் செய்து வருகின்றான்.
̶➣ அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் நான் உங்களிடம் இரண்டு விடயங்களை விட்டுச் செல்கின்றேன் ஒன்று குர்ஆன் மற்றையது எனது சுன்னா (வாழ்வும் வாக்குமான நடைமுறையும்) எதுவரை நீங்கள் அவ்விரண்டையும் பற்றிப்பிடித்து இருப்பீர்களோ அதுவரை வழிகெட்டுப்போக மாட்டீர்கள் என்று கூறிச் சென்றார்கள்.
திருக்குர்ஆனில் அல்லாஹ் ஏகத்துவக் கொள்கைகயையும் மார்க்க விடயங்களையும் தெளிவாகவும் வெளிப்படையாகவும் எடுத்துரைத்து விட்டான். சத்தியத்தைத் தேட ஆர்வம் உடையவன் அதனை படித்து சத்தியத்தைப் பெற்றுக் கொள்கின்றாள். நாம் இந்த இரண்டையும் கை விட்டதால் தான் வழிகேட்டை தழுவிக் கொண்டுள்ளோம்.
அல்லாஹ் இணை வைப்பதை எந்த நிலையிலும் சகித்துக்கொண்டதில்லை. ஆகவே எவர் எந்த அறிவிப்பை எடுத்துக் கூறினாலும் அல் குர்ஆன் சுன்னாவிற்கு மாறானதாக எதிரானதாக முரண்பட்டதாக இருந்தாள் அது ஒரு போதும் ஏற்கத்தக்கதல்ல.
அல்லாஹ் உலக மக்களுக்கு எண்ணற்ற இறை தூதர்களை அனுப்பினான். அவர்கள் அனைவருடைய போதனையிலும் முதலாவதாக திகழ்ந்தது "அல்லாஹ் இணை துணையற்ற அவன் தனித்தவன் அவனிடமே உங்கள் தேவைகளை கேளுங்கள் அவனைத் தவிர உதவி புரிபவர் வேறெவரும் இல்லை" என்பதேயாகும். இணைவைப்பிலிருந்து தப்பிக்க வேண்டும் ஏகத்துவத்தில் நிலைத்திருக்க வேண்டும் என்பதுதான் இஸ்லாத்தின் முதல் போதனையாகும். மனிதன் ஏகத்துவத்தில் உறுதியாக இருப்பானாயின் அவனது நற்செயல்கள் இறைவனிடம் அங்கீகரிக்கப்படும் இல்லை என்றால் அவை நிராகரிக்கப்படும் வீணாகிவிடும். எச்சில் துப்புவதிலிருந்து ஆட்சி செய்யும் வரை கூறியிருக்கும் இந்த மார்க்கத்தில் எந்த ஒரு சிருக்கும் (شرك) அவசியமில்லை.
̶➥அல்லாஹ் அல்குர்ஆனில் கூறுகின்றான்.
திண்ணமாக நாம் மனிதனைப் படைத்தோம் அவனது உள்ளத்தில் ஊசலாடும் எண்ணங்களை நாம் அறிவோம். நாம் அவனது பிடரி நரம்பை விட அவனுக்குச் சமீபமாக இருக்கின்றோம்.
எனவே நாம் (لاإله إلا الله)
வணக்கத்துக்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை என்றுகூறி இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் தூதுத்துவத்தை ஏற்றுக் கொண்டு ஏகத்துவக் கொள்கையை ஒப்புக்கொண்டு அதன் பொறுப்புகளை சரிவர நிறைவேற்றி குர்ஆன் சுன்னா அடிப்படையில் வாழ்வதற்கு முயற்சிப்போம் இன்ஷா அல்லாஹ்.🤲
Written by :- Abu Ayyash✍🏻
No comments:
Post a Comment