_*Islamic Tamil Library*_
💙🤍💙🤍💙🤍💙🤍
*السلام عليكم ورحمة الله وبركاته.*
˚₊· ͟͟͞͞➳❥˚₊· ͟͟͞͞➳❥˚₊· ͟͟͞͞➳❥
✎ _*அசாத்தியத்தை சாத்தியமாக்கிய அல்குர்ஆன்.*_
🎙️ *அல்லாஹ் குர்ஆனிலே கூறுகின்றான்* .
_(أفلا يتدبرون القرآن)_
_அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா?_
✨ *திருக்குர்ஆன் ஓர் அற்புதம் என்றால் அதன் விளக்கம் பேரற்புதம்.*
திருக்குர்ஆன் என்பது இவ்வுலகைப்படைத்த இறைவன் மக்களுக்கு நேர்வழி காட்டுவதற்காக தனது தூதர் மூலம் கற்றுத்தரும் அறிவுரைகளின் தொகுப்பாகும்.
அகில உலக மக்களுக்கு வழிகாட்டிக்கொண்டிருக்கும் அல்குர்ஆன் இன்றைய விஞ்ஞான வளர்ச்சியில் முன்னேறியுள்ள காலத்தில் பல அறிஞர்களை சிந்திக்கவும்,ஆராய்ந்து பார்க்கவும் வைத்துள்ளது.மனிதனை சிந்திக்க வைத்து அவன் உண்மைகளை பகுத்தரியட்டும் என்பதற்காக அவனது படைப்பினங்களின் உதாரணங்கள் பல வற்றை திருக்குர்ஆனில் இறைவன் கூறுகிறான். பாமரர்களையும் படித்தவர்களையும் அவரவர் பாளையில் சிந்திக்க வைத்து உண்மைகளை உரைத்தூண்டுவது திருக்குர்ஆனின் மற்றொரு சிறப்பம்சமாகும்.
✨ *சூரியன் அழிந்து போகும்* ✨
சூரியன் ஆனது *4.5 BILLION* வருடங்களுக்கு முன்னர் நமது பால்வீதியில் அடர்த்தியான புகைபோன்ற வாயுக்களால் கொழுந்து விட்டெரியும் நட்சத்திரமாக உருவாகியது.
📘 விஞ்ஞானிகள் சூரியனை இந்த சூரிய மண்டலத்தின் இருதயமாகக் கருதுகிறார்கள்.இன்னும் சூரியன் அதன் மையத்தில் நடைபெறும் டேர் மோ நியூக்ளியர் பியூஸன் எரிப்பு செயற்பாட்டின் காரணமாக வெளிச்சத்தையும் வெப்பத்தையும் வெளிவிடுகின்றது. இதற்கு எரிபொருளாக சூரியனானது ஜதரசன் *(HYDROGEN)* அணுக்களை பயன்படுத்துகிறது.இந்த செயற்பாடானது சூரியன் பிறந்ததிலிருந்து தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
மேலும் சூரியனைப்பற்றி விஞ்ஞானிகள் கூறுகையில் சூரியனானது நிலைத்திருக்கக் கூடியதல்ல அதற்கு இறப்பு உள்ளது அதாவது நாம் முன்னர் கூறியது போல சூரியனானது உயிர்ப்புள்ளதாக இருக்க அது *(HYDROGEN)* அணுக்களை எரிபொருளாகப் பயன்படுத்தி அதனை எரிப்பதன் மூலம் அதன் சக்தியை வெளியிட வேண்டும் .
ஆனால் இன்னும் *6.5 BILLION* வருடங்களில் சூரியனின் எரிபொருளான *(HYDROGEN)* முற்றாகத் தீர்ந்து விடும். இதனால் சூரியனானது டெர் ஜைன் எனும் இராட்சக உருவத்தை எடுத்து பின்னர் *வெள்ளைக்கூலம்* *( White Dwarf )* பெற்று இறந்து விடும். இதன் காரணமாக புவியிலுள்ள அனைத்து உயிரினங்களும் அழிவதோடு எமது சூரிய மண்டலமும் அழிந்து விடும் என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
*இந்த 21ம் நூற்றாண்டின் நவீன விஞ்ஞானத்தை அல்குர்ஆன் ஒரே ஒரு வரியில் கூறுகின்றது سبحان الله*
🎙️ _*( والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم )*_
_*இன்னும் அவர்களுக்கு (அத்தாட்சி) சூரியன் தன் வரையரைக்குள் அது சென்று கொண்டிருக்கிறது.இது யாவரையும் மிகைத்தோனும்,யாவற்றையும் நன்கறிந்தோனும் ஆகிய இறைவன் விதித்ததாகும்.*_
இந்த வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள அரபு வார்த்தையானது ( *مستقر* ) ஆகும்.
*இதன் அருத்தம் குறிப்பிட்ட இடம் அல்லது குறிப்பிட்ட காலம்* _(A place or Time That is determined)_ ஆகும்.
எனவே அல்குர்ஆன் கூறுகின்றது சூரியனானது ஒரு குறிப்பிட்ட இடத்தை நோக்கி ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் பயனக்கின்றது என்று.சாதாரனமாக சூரியனின் முடிவு வந்து கொண்டிருக்கின்றது என அல்குர்ஆன் தெளிவாகக் கூறுகின்றது.
இவ்வனைத்துக் கருத்துக்களும் நவீன விஞ்ஞாத்தின் அடிப்படையில் கடந்த சில நூற்றாண்டுகளில் கண்டு பிடிக்கப்பட்டவையாகும். ஆனால் 14 நூற்றாண்டுகளுக்கு முன்னர் இவற்றை யாராவது சொல்ல முடியுமா..? ஏன் நினைத்துக்கூட பார்க்க முடியாது . இது ஒன்றே இந்த அல்குர்ஆன் இறைவனின் வார்த்தை என்பதை பரைசாட்டுகின்றது.
_*அறிவுடையோர் சிந்திக்கட்டும்*_.
*இப்படிக்கு அல்லாஹ்வின் அடியான்:-* *~أبو عياش~* ✍🏻
No comments:
Post a Comment