Ads Here

Monday 27 September 2021

தொழுகையும் இன்றைய சமுதாயத்தின் நிலைபாடும்

 

*Islamic💚 culture*

*السلام عليكم ورحمة الله وبركاته.*

*தொழுகையும் இன்றைய சமுதாயத்தின் நிலைபாடும்


*
-------------

அல்லாஹ்வை ரப்பாகவும் நபியவர்களை ஒரு தூதராகவும் ஏற்றுக்கொண்ட ஒரு மிஸ்லிம் செய்ய வேண்டிய ஒரு முக்கிய இபாதத்தாக தொழுகை காணப்படுகிறது.

நபியவர்கள் வானத்திற்கு மிஃராஜ் (معراج) சென்ற வேலையில் அல்லாஹ்வால் வழங்கப்பட்ட மிகப்பெரிய பரிசே தொழுகையாகும்.

அல்லாஹ் அனைத்து அமல்களையும் பூமிக்கு மலக்குமார்களை அனுப்பி அதனை நிறைவேற்றுமாறு பணித்தான்.
ஆனால் தொழுகையை மாத்திரம் வானுலகத்திற்கு நபியை வரவழைத்து கண்ணியமான முறையில் பரிசளித்தான்.

தொழுகை எந்த அளவிற்கு முக்கியம் என்றால் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : *நின்று தொழ முடியவில்லையா உட்கார்ந்து தொழுங்கள்.அதுவும் முடியவில்லையா படுத்துக் கொண்டு தொழுங்கள்.அப்படியும் முடியவில்லை என்றால் கண்ணால் சாடைசெய்தாவது தொழுங்கள்.அப்படியும் முடியவில்லை என்றால் சில இமாம்கள் மனதால் சரி தொழ வேண்டும் என்று.*

அதே போன்று நபியவர்கள் ஸகராத் உடைய வேளையிலும் (عليكم بالصلاة) தொழுகையை பற்றிப் பிடியுங்கள் என்று உபதேசித்தார்கள்.

ஆனால் இன்றைய எமது இஸ்லாமிய சமுதாயம் தொழுகையுடைய விடயத்தில் பல பிரிவுகளாக பிரிகின்றனர்.
😞😞👇👇
1:-ஜும்மா முஸ்லிம்.
2:-சும்மா முஸ்லிம்.
3:-இரு பெருநாள் தினங்களில் மாத்திரம் தொழக்கூடியவர்கள்.

```سبحان الله...``` 😒😒😒😒😏
இது தான் எமது சமுதாயத்தின் நிலை.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். *ஒரு முஃமினுக்கும்,காபிருக்கும் இடையிலான வேறுபாடு தொழுகையை விடுவதாகும்.* 😳😳

அப்படியென்றால் இந்த தொழுகையை விடுபவர்கள் நம்மில் எத்தனை பேர்?😒😒

*W.app* இல் Chat பண்ணுவதற்கு *Facebook* இல் விபச்சாரம் செய்வதற்கு *Internet* இல் படம்பார்ப்பதற்கு நேரம் ஒதுக்க முடியுமென்றால் ஏன் எமது சமுதாயம் அல்லாஹ்வுக்காக ஒரு நாளைக்கு அரை மணித்தியாலம் ஒதுக்குவதற்கு மறுக்கின்றார்கள்?🤔😒

அல்லாஹ்வை மறந்து வாழக்கூடியவர்களே!!!!!!!
நன்றாக ஒன்றை மனதில் வைத்துக்கொள்ளுங்கள் மறுமையில் முதலாவதாக விசாரிக்கும் இபாதத் தொழுகையாகும்.
இத்தொழுகையை நீங்கள் தொழாமல் அல்லாஹ்வையும் மறந்து வாழ்ந்து நாளை மறுமை நாளில் எவ்வாறு இந்த கேள்விக்கு விடையளிப்போகின்றீர்கள் என்பதை
சிந்தித்துப் பார்க்க மாட்டீர்களா?😒
```نعوذ بالله```
.
*நோன்பு நோற்கவில்லையென்றால் நோயாளியாக இருந்தேன் என்று காரணம் காட்டலாம்.ஹஜ் செய்யாமல் விட்டு விட்டால் ஆரோக்கியம்,பணம் பிரச்சினை என்று தப்பிக்கலாம்.அது போல ஸகாத் கொடுக்கவில்லையென்றால் சொத்து,செல்வம் இல்லை என்று காரணம் சொல்லலாம்.ஆனால் தொழுகையை விட்டதற்காக எந்த ஒரு காரணத்தையும் கூறி தப்பிக்க முடியாது.*

ஆனால் இன்றைய சமூகம் Busy Busy என்று தொழுகையிலே பொடுபோக்காக இருப்பதை நாம் கண்கூடாக காண்கிறோம்.

அதே போன்று தொழுகையை விடுபவர்களுக்கு அல்லாஹ் ஸகர் *(سقر)*
என்ற நரகத்தை தயார்படுத்திவைத்துள்ளான் என்று  قرآن கூறுகின்றது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
```*(قرة عيني في الصلاة.)*```
🥰🥰😍😍🥰
*தொழுகையிலே எனக்கு கண்குளிர்ச்சி இருக்கின்றது*

ஆனால் இந்த காலத்தை எடுத்துக் கொண்டால் Mobile இல் தான் கண் குளிர்ச்சி இருக்கின்றது.
😔😔😢😢😢
```سبحان الله..```

இன்று மனநிம்மதி இல்லாமைக்கும்,பிரச்சினை,சோதனைக்கும் ஒரு முக்கிய காரணமாக தொழுகையை விடுவது காணப்படுகின்றது.

நம்மில் எத்தனை பேர் வேலைப்பளு, களைப்பு என்று தொழுகையை விடுகின்
றோம்.

எந்த சூழ்நிலையிலும் விடமுடியாத ஒரு இபாதாவாக தொழுகை காணப்படுகிறது.ஆனால் இன்றைய சமுதாயம் தொழுகையுடைய விடயத்தில் பொடுபோக்காக இருக்கின்றார்கள்.

இன்னும் சொல்லப்போனால் நம்மில் பலருக்கு இசை🎶🎶🎶
கேட்பதற்கும் ஆபாச படங்களை பார்ப்பதற்கும் நேரத்தை வீணடிக்க முடியும்.

ஆனால் ஐ வேலைத் தொழுகையை நிறைவேற்ற நேரமில்லை.
இந்த துன்யா அழியக்கூடியது என்று தெரிந்தும் அமல்களை செய்ய முன்வருவதில்லை..😒

*ஆகவே,அன்பானவர்களே! தொழுகையை விட்டால் ஏற்படும் விபரீதங்களை சொல்லிக்கொடுப்போம்.அவர்களையும் நரக நெருப்பில் இருந்து காப்போம்.*

*இப்படிக்கு அல்லாஹ்வின் அடிமை*:-
🥰
~*Abu Ayyash*~✍🏻

No comments:

Post a Comment